உன் புருசன் என்னை கர்ப்பமாக்கிட்டான்..! அவனை நான் கல்யாணம் பண்ணப்போறேன்..! மகளுக்கு பெற்ற தாய் கொடுத்த ஷாக்!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பெற்ற மகளிடமே பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


லாரன் வால் என்ற பெண்ணுக்கும் பால் ஒயிட் என்பவருக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கணவர் இல்லை என்றாலும் மகள் லானுக்கு எந்த குறையும் இல்லாமல் சுமார் 15,000 பவுண்டு செலவு செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் தாய் ஜூலி. இதையடுத்து தேனிலவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

உலகத்திலேயே முதல் முறையாக மகளுடன் சேர்ந்து தாய் ஒருவர் தேனிலவுக்கு சென்றது இவர்களாகத்தான் இருக்கும். அதன்படி குடும்பமே சேர்ந்து தேவோன் என்ற பகுதிக்கு தேனிலவு கொண்டாட சென்றது. தேனிலவுக்கு சென்ற கணவர் மனைவியுடன் மட்டும் அல்லாமல் மாமியாரையும் கரெக்ட் செய்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இது அப்படியே கள்ளக்காதலமாக மலர தாயும், கணவரும் நண்பர் போல் பழகுகிறார்கள என மகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனிடையே வாலனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது கணவருடன் சேர்ந்து தாய் உல்லாசமாக இருப்பது தெரியவர அதை கண்டித்துள்ளார் மகள். ஆனால் இதை ஏற்காத கணவர் திருமணத்தின்போது அணிந்த மோதிரத்தை தூக்கி எறிந்துவிட்டு மாமியரிடமே வாழ சென்றுவிட்டார்.

பொதுவாக நம்மூரில் கணவருடன் பிரச்சனை என்றால் பெண்கள் தாலியை கழற்றி வீசுவதுபோல, அங்கே கணவர் மோதிரத்தை கழற்றி வீசியுள்ளார். இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் கழித்து கணவருக்கும், அம்மாவுக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அந்த பெண். இதுகுறித்து வேதனையுடன் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளார்.

என் கணவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக எனக்கே அழைப்பிதழ் அனுப்பினார்கள். என் மகளின் எதிர்காலம் கருதி வேறு வழியின்றி அவர்கள் திருமணத்திற்கு சென்றேன். இந்த சம்பவம் குறித்து பலமுறை தாய் என்னிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது நான் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டேன் என அவர் கூறினார்.