இளம் பெண்ணின் வீட்டு காலிங் பெல்லை சுமார் 3 மணி நேரமாக நக்கிக் கொண்டிருந்த விநோத மனிதனை போலீசார் தேடி வருகின்றனர்.
இளம் பெண் வீட்டு காலிங் பெல்லை 3 மணி நேரமாக நக்கிய விநோத மனிதன்! வைரல் வீடியோ!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சலினாஸ் எனும் நகரை
சேர்ந்தவர் சில்வியா டங்கன். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி
வருகிறார். நேற்று முன்தினம் இரவு சில்வியா இரவுப் பணியாக அலுவலகம்
சென்றுவிட்டார். வீட்டில் அவரது குழந்தைகள் மட்டும் தனியாக உறங்கியுள்ளனர்.
மறுநாள் காலை சில்வியா வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் நுழைவு வாயில்
அருகே யாரோ சிறுநீர் கழித்துள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி
அடைந்த சில்வியா, வீட்டின் முன்பகுதியில் சிறுநீர் கழித்த நபரை கண்டுபிடிக்க
சி.சி.டி.வி காட்சிகளை பார்த்துள்ளார். அதனை பார்த்த சில்வியாவுக்கு மேலும்
அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த நபர்
ஒருவன், காலிங் பெல்லை அழுத்துவதற்கு பதிலாக அதனை நக்கியுள்ளான். முதலில் இதனை
பார்த்த சில்வியா, சரி பிறகு என்ன செய்கிறான் என்று சிசிடிவி காட்சிகளை பாஸ்ட்
பார்வேர்ட் செய்துள்ளார்.
அப்போது சுமார் 3 மணி
நேரமாக காலிங் பெல்லை நக்குவதும், பிறகு சி.சி.டி.வி கேமராவை அருகில் சென்று
முறைத்து பார்ப்பதுமாக அந்த நபர் விநோத செயலில் ஈடுபட்டுள்ளான். இதனை பார்த்து
நெஞ்சடைத்துப்போன சில்வியா உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து
வந்த போலீசார் சி.சி.டிவி காட்சிகளை பார்த்து அதில் இருக்கும் நபரை அடையாளம்
கண்டுபிடித்தனர். அருகாமையில் உள்ளவர்களிடம் விசாரித்த போது காலிங் பெல்லை
அழுத்தியவன் யார் என்பது தெரியவந்தது.
அந்த நபர் பெயர் ராபர்ட்டோ
டேனியல் என்று போலீசார் கூறியுள்ளனர். எதற்காக அவன் சில்வியா வீட்டிற்கு வந்தான்,
எதற்காக சுமார் 3 மணி நேரமாக காலிங் பெல்லை அவன் அழுத்திக் கொண்டிருந்தான் என்று
தெரிந்து கொள்ள அவனை தேடி வருகின்றனர். ஆனால் அவன் வீட்டில் இல்லை என்று அவனது
குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவன் மன நலம் பாதிக்கப்பட்டவனா என்று கேட்ட போது
குடும்பத்தினர் இல்லை என்று தெரிந்துள்ளனர்.
இதனால் எதற்காக அவன் சில்வியா வீட்டிற்கு வந்தான்? எதற்காக காலிங் பெல்லை நக்கினான்? என்று தெரிய வேண்டும் என்றால் அவனை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவனை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் சில்வியா வீட்டின் காலிங்க பெல்லை டேனியல் நக்கிய சி.சி.டி.வி காட்சிகள் இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது.