20 வயது மகளை கதற கதற குத்திக் கொன்ற தந்தை! அதிர வைக்கும் காரணம்!

வேறு ஜாதி இளைஞரை காதலித்த மகளை தந்தை கொடூரமாக கொலை செய்துள்ளார்.


   ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் வைஷ்னவி. இவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் படிக்கும் இளைஞர் ஒருவருடன் வைஷ்னவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாகியுள்ளது.

வைஷ்னவி காதலிக்கும் விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரியவந்துள்ளது. கல்லூரிக்கு சென்று படிக்கும் வேலையை மட்டும் பார்க்குமாறு வைஷ்னவியை தந்தை கண்டித்துள்ளார்.

இதனை பொருட்படுத்தாமல் வைஷ்னவி தொடர்ந்து இளைஞருடன் காதல் வளர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வைஷ்னவியின் தந்தை வெங்க ரெட்டி மகள் வைஷ்னவியை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் திடீரென வீட்டில் இருந்து வெளியேற வைஷ்னவி முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை வெங்க ரெட்டி மகளை தடுத்து நிறுத்தியுள்ளார். ஆனால் மகள் கேட்பதாக தெரியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்க ரெட்டி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகள் என்றும் பாராமல் சதக் சதக் என குத்தியுள்ளார். இதில் வைஷ்னவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து வெங்க ரெட்டி அங்கிருந்து தப்பியுள்ளார்.

மகள் வைஷ்வனி காதலிக்கும்இளைஞர் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் வெங்க ரெட்டி. ஆனால் இதனை கேட்காமல் மகள் வீட்டை விட்டு வெளியேற முயன்றதால் இந்த கொடூரமா முடிவை வெங்க ரெட்டி எடுத்துள்ளார்.

இதனை அடுத்து வெங்க ரெட்டியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனது மகளை தான் கொலை செய்யவில்லை என்று வெங்க ரெட்டி மறுப்பதாக கூறப்படுகிறது.