கணவன்களை பயன்படுத்தி 68 மனைவிகளுடன் உல்லாசம்! கேரளாவை கலக்கிய பிரதீஷ் குமார்!

சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி, சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களின் கணவன்களுடன் பழகி அவர்களின் ஆபாச புகைப்படங்களை பெற்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவந்த நபர் பிடிபட்டுள்ளார்.


கேரள மாநிலம் எட்டமானூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஸ் குமார் 25, இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில்  இவர் ஒரு பெண் போல போலி கணக்கு தொடங்கி பல பெண்களின் கணவன்களுக்கு நட்பு அழைப்பு விடுத்து, தான் ஒரு பெண் பேசுவது போலவே பேசி நாளடைவில் அவர்களிடமிருந்து ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.

பின்னர் கணவன்களின் புகைப்படங்களை அவர்களின் மனைவிகளுக்கு அனுப்பி அவர்களுக்கு இடையே பிரச்சனையை உருவாக்கியுள்ளார் பிரதீஷ். இப்படியாக சுமார் 68 பெண்களின் கணவன்களை ஏமாற்றி அவர்கள் மூலம் மனைவிகளுடன் தொடர்பு கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.  இவற்றை எல்லாம் வீடியோவாக எடுத்து வைத்து ஒரு கட்டத்தில் அப்பெண்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளான்.

இதற்காக வீடியோ சாட்டிங் செய்து வந்துள்ளதாகவும், அப்போது ஸ்கிரீன்ஷாட் மூலம் அவர்கள் செய்வது அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அதனை காட்டி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். தனது ஆசைக்கு இணங்காத பெண்களிடம் இந்த புகைப்படங்கள் அனைத்தையும் உங்களது கணவருக்கு அனுப்பி வைத்து விடுவேன் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியும் உள்ளார்.

இதையடுத்து இந்த விஷயம் தன் கணவருக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் பல பெண்கள் இதுகுறித்து புகார் அளிக்காத நிலையில் துணிந்து ஒருவர் மட்டுமே அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மற்றும் அவரது மடிக்கணினியில் இருந்து பல்வேறு மார்பிங் செய்த புகைப்படங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அனைத்தையும் மடிக் கணினியில் இருந்து நீக்கிவிட்டனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையில் பிரதீஸ்குமார் கூறியதாவது: குறிப்பாக திருமணம் முடித்து வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் கல்லூரி செல்லும் பெண்ககளை மட்டுமே இவ்வாறு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளார்.