நடுரோட்டில் காதலிக்கு உதட்டில் முத்தம்! வீடியோ எடுத்துவிட்டு தப்பி ஓடிய நபர்!

முத்தம் கொடுத்த ஜோடியை வீடியோ எடுத்தவருக்கு மும்பை போலீசார் வலை வீசியுள்ளனர்.


மும்பையில் ஆட்டோவில் முத்தம் கொடுத்தவாறே சென்ற இளம் ஜோடியை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட இருசக்கர வாகன நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பையின் மேற்கு பகுதி புறநகர் ஒன்றில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஒன்றில் செல்லும் இளம் ஜோடி ஒன்று தன்னிலையும் சுற்றுப்புற நிலையும் மறந்தவாறே முத்தம் கொடுத்தபடி செல்கின்றனர். அப்போது அவர்களை இரு சக்கர வாகனத்தில் கடந்து செல்லும் நபர் சுமார் 30 வினாடிகள் வரை அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்ற அது வைரலாகியிருக்கிறது. 

தற்போது இருசக்கர வாகன நபரை போலீசார் தேடி வருகின்றனர். அது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்ற போதும் தானக முன்வந்து தேடிக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினரும் சிக்கினாலும் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

அந்த இளம் ஜோடிகள் ஆட்டோவில் அவ்வாறு நடந்துகொண்டது குற்றம் என்றும் அவர்கள் மீது பொது இடத்தில் அத்து மீறி நடந்துகொண்ட பிரிவில் வழக்கு பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ள போலீசார், அதே போன்று அவர்களை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டது ஒருவரின் தனிப்பட்ட விவகாரத்தில் அத்துமீறிய குற்றம் என்று கூறியுள்ளனர்.