காதல் மனைவிக்காக விதவிதமாக 55 ஆயிரம் ஆடைகள் வாங்கி குவித்த கணவன்!

தனது மனைவி ஒரு முறை அணிந்த ஆடைகளை மீண்டும் அணியக்கூடாது என ஆடைகளை வாங்கி குவித்துள்ள கணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


ஜெர்மனியைச் சேர்ந்த 85 வயது முதியவர் மனைவிக்காக 55 ஆயிரத்துக்கும் அதிக ஆடைகளை வாங்கிக் குவித்ததால் மனைவி ஒரு முறை அணிந்த ஆடைகளை மீண்டும் அணிவதில்லை.பால் ப்ரோக்மேன் என்பவரின் மனைவி மார்கரெட்டுக்கு தற்போது வயது 61.  அவர்கள் இருவரும் ஜெர்மனியில் ஒரு நடன அரங்கில் சந்தித்துக் கொண்டனர். 

அப்போது சேர்ந்து நடனமாடிய இருவரும் பழகி, காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் மனைவியின் மேல் இருந்த காதலில் பால் ப்ரோக்மேன் அவருக்காக ஆயிரக்கணக்கில் ஆடைகளை வாங்கிக் குவித்தார். 

காதலின் வேகத்தில் ஆடைகளின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடநததும் அவருக்குத் தெரியவில்லை.ஆடைகளை சேமிக்க தலா 50 அடி நீளமுள்ள 3 கண்டெய்னர்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் வேறு என்ன செய்வார் மார்கரெட்? ஒரு முறைக்கு மேல் ஒரு ஆடையை அணிவதில்லை.

அப்படி அணிந்தும் ஆடைகள் தீர்ந்தபாடில்லை. இதையடுத்து இதுவரை 7 ஆயிரம் ஆடைகளை விற்றுள்ள அந்த தம்பதிகள் எஞ்சிய 48 ஆயிரம் ஆடைகளையும் விற்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். 

எனினும் சுமார் 200 ஆடைகளை மார்கரெட்டின் பயன்பாட்டுக்காக தேர்வு செய்து எடுத்து வைத்துள்ளனர். இப்படி ஆடைகள் மூலம் தனது மனைவி மீதான காதலை வெளிப்படுத்திய பால் ப்ரோக்மேன் தான் இப்போது ஜெர்மனியின் ஹீரோ