கழட்டிவிட்ட காதலி! லாட்ஜூக்கு வரவழைத்த காதலன்! அடைத்து வைத்து நாள் முழுவதும் கற்பழிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் காதலியை ஏமாற்றி அழைத்துச் சென்று இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பல்கர் மாவட்டத்தில் பாய்சர் என்ற இடத்தைச்  சேர்ந்தவன் ஃபைசல் சஃபி. இவன் கடந்த 2017-ஆம் ஆண்டு வரை ஒரு 21 வயதுப் பெண்ணை காதலித்தான். எல்லாம் ஒழுங்காகத் தான் சென்றுகொண்டிருந்தது, அந்தப் பெண் அவனை காதலிக்கும் வரை.

 

2017-ஆம் ஆண்டு அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துகாக ஃபைசல் சஃபியை வெறுத்து விலகிவிட்டாள். அதனால் ஏற்பட்ட ஆத்திரமும் அவளை முழுமையாக அனுபவித்து கசக்கிப் போட்டுவிட வேண்டும் என்ற வெறியும் அவனைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது.

 

இதற்கு இருவரும் காதலித்த போது நெருக்கமாக இருந்த நிலையில் அவன் செல்ஃபோனில் திருட்டுத் தனமாக எடுத்து வைத்திருந்த வீடியோக்களும் அவனுக்கு கை கொடுத்தன. அந்த வீடியோக்களைக் காட்டிக் காட்டியே இளம் பெண்ணை அவன் மிரட்டி வந்தான்.

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை அவளை தொடர்புகொண்ட அவன் அந்த வீடியோக்களை செல்ஃபோனில் இருந்து அழிக்க வேண்டுமானால் லாட்ஜ் ஒன்றின் அறைக்கு வருமாறு அழைத்தான். இதையடுத்து கடைசியாக ஒருமுறை சந்தித்து தலைமுழுகிவிட்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அந்தப் பெண்ணும் அங்கு சென்றாள்.

 

ஆனால் அங்கு சென்றபின் தான் தெரிந்தது ஃபைசலின் குயுக்தியான திட்டம். அவளை விடுதி அறைக்குள்ளேயே சிறைப் பிடித்த அவன் கடந்த 10-ஆம் தேதிக்கும் 11-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட இரவு முழுவதும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது

 

இந்நிலையில் 12-ஆம் தேதி காலையில் அந்தப் பெண்ணை அவன் விடுவித்தான். அங்கிருந்து நேராக காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தப் பெண், ஃபைசல் மீது புகார் அளித்தாள். 

அதன் பேரில் அவன் மீது பாலியல் பலாத்காரம், அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் அவனை கைது செய்தனர்