கொரானாவுக்கு எதிராக போராடிய இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கதி! ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

உலகெங்கும் கொரனா அச்சுறுத்தும் நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த நபருக்கு சிகிச்சை அளித்த விவரத்தை அரசுக்கு தெரிவிக்காத புகாரில் பெண் மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


இந்தியாவில் கொரனா அறிகுறி இருந்தால் உடனே அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கத்தார் நாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அரசுக்கு தெரிவிக்க வில்லை என கூறப்படுகிறது.

கத்தார் நாட்டில் இருந்து கடுமையான காய்ச்சலுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளித்த அந்த பெண் மருத்துவர் அவர் கொரனா சோதனை செய்ய முயற்சி செய்தார். அந்த நபர் மறுத்தது மட்டுமின்றி மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். இந்த தகவலை மட்டும் பெண் மருத்துவர் ஷினு வெளியில் சொல்ல பிரச்சனை ஆரம்பம் ஆனது.

இதனால் தனியார் மருத்துவமனையை அரசு கண்டித்த நிலையில் பெண் மருத்துவர் ஷினுவை அந்த மருத்துவமனை நிர்வாகம் உடனே டிஸ்மிஸ் செய்துவிட்டது. அந்த பெண் மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வந்த நோயாளி எந்த பிரச்சனையும் இன்றி மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.

ஆனால் இதுகுறித்து ஷினு பீதியை கிளப்பி, ஒட்டு மொத்த மருத்துவ சமுதாயத்துக்கும் ஷினு அவப்பெயர் ஏற்படுத்தியதாக மாவட்ட நிர்வாகம் குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு குறித்து பேசிய ஷினு, என்னுடைய கடமையை செய்ததற்கு தண்டிக்கப்பட்டுள்ளேன். இனி அந்த மருத்துவமனைக்கு பணிக்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.