திருடுவதற்கு அனுமதி! வைரலாகும் வீட்டு உரிமையாளரின் நூதன புகைப்படம்

2 காய் மட்டும் திருடவும் என்ற போர்டு தெரிய முருங்கை மரம் ஒன்றின் புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களின் வரவால், நாளுக்கு நாள் புதுப்புது விசயங்கள் வைரலாகப் பரவுவது வாடிக்கையாகும். இதன்படி, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப்பில் கடந்த சில நாட்களாக, சில புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன.


முருங்கை மரம் ஒன்றைச் சுற்றிலும் வேலி அமைத்து, அதில், மரத்தின் உரிமையாளர் சில போர்டுகளை எழுதி தொங்க விட்டுள்ளார். அப்படி அந்த போர்டுகளில் என்ன எழுதியுள்ளது என்று கேட்கறீர்களா? அதாங்க சுவாரசியத்திற்கு காரணம். 


திருடர்களின் கவனத்திற்காக, மரத்தின் உரிமையாளர், எழுதியுள்ள அந்த வாசகங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ''2 காய்கள் மட்டும் திருடவும்''; ''கிளையை ஒடிக்காமல் திருடவும்'' என்பன போன்ற வாசகங்களை அதில் மரத்தின் உரிமையாளர் எழுதி வைத்துள்ளர். 


சாலை ஓரமாக இந்த வீடு அமைந்துள்ளதையும், அதில் முருங்கை திருடர்களை கவனத்தில் வைத்து, உரிமையாளர் வாசகங்கள் எழுதி போர்டில் தொங்க விட்டுள்ளதையும் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர், அதனை புகைப்படமாக எடுத்து பகிர, தற்போது சமூக ஊடகங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி விட்டன.


முருங்கைக்காய் தமிழர்களால் அதிகம் விரும்பி சமைக்கப்படுவதாகும். அதன் முக்கியத்துவம் அறிந்துதான், மரத்தின் உரிமையாளர்


இத்தகைய போர்டை எழுதி வைத்துள்ளார் போலும்.