பள்ளிக்கூடத்தில் வைத்து மாணவி கதற கதற கற்பழிப்பு! ஆசிரியர்கள் செய்த கொடூரம்!

16 வயது சிறுமியை பள்ளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவன் கைது செய்யப்பட்டான்.


மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டம் சன்டவாட்டா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை ஆஸம் கான் என்ற இளைஞன் ஏமாற்றி அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். 

   அங்கு ஒரு அறைக்குள் மாணவியை அவன் அழைத்துச் சென்றதும் அங்கு பணிபுரியும் 2 ஆசிரியர்கள் அறையின் கதவை பூட்டினர். இதையடுத்து அந்த மாணவியை ஆசம் கான் பாலியல் பலாத்காரம் செய்தான். இதனை ஆசிரியர்கள் இருவரும் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் எப்படி எல்லாம் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று ஆசம் கானுக்கு அவர்கள் அறிவுரை கூறி ஊக்கப்படுத்தியுள்ளனர்.

   பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி பிறகு கதறி அழுதுள்ளார். மேலும் உடல் எங்கும் காயத்துடன் தட்டுத் தடுமாறி அங்கிருந்து சென்ற அந்த மாணவி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறினார். ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய அவனை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திய செய்தி காட்டுத் தீயாக பரவியது.

   இதைக் கேட்டு அதிர்ச்சி பொதுமக்கள் சிறுமியின் பெற்றோருடன் சென்று உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து ஆசிம்கானை போலீசார் கைது செய்தனர். அவன் மீது பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது .

   பாலியல் பலாத்காரத்திற்கு உதவிய ரித்திக் குஸ்வாஹா, ஷாம் பிரஜாபதி ஆகிய தனியார் பள்ளி ஆசிரியர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.