சித்தப்பாவுடன் தகாத உறவு! கர்ப்பமான இளம் பெண்! கண்டுபிடித்த தந்தை! பிறகு நேர்ந்த விபரீதம்!

சென்னையில் சித்தப்பா முறையுடைய நபருடன் தகாத உறவு வைத்திருந்த இளம் பெண் கர்ப்பமானதை தொடர்ந்து குடும்பத்தில் மோதல் வெடித்துள்ளது.


சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வசுந்தரா. இவர் படித்து முடித்துவிட்டு தியாகராயநகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான் ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கப்போவதாக தனது தந்தை சுரேஷ் மற்றும் தாய் கமலாவிடம் கூறியுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு தினமும் தியாகராயநகரில் இருந்து வில்லிவாக்கம் வந்து செல்வது கஷ்டமாக இருப்பதாக கூறியுள்ளார் வசுந்தரா.

இதனை உண்மை என நம்பி மகளை ஹாஸ்டலில் தங்க அனுமதித்துள்ளார் சுரேஷ். இதனிடையே வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து சென்ற வசுந்தராதிடீரென வருவதை நிறுத்தியுள்ளார். இதனால் அவர் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் இல்லை. விசாரித்த போது கோடம்பாக்கத்தில் வசுந்தரா தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதனால் பதறி அடித்துக் கொண்டு அங்கு சுரேசும் தாய் கமலாவும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்களை உறைய வைத்துள்ளது. காரணம் வசுந்தரா வயிற்றை தள்ளிக் கொண்டு கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் வீட்டில் வசுந்தராவுடன் பிரேம் என்பவர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ரமேஷை பார்த்ததும் பிரேமுக்கு மேலும் தூக்கி வாரிப்போட்டது.

ஏனென்றால் பிரேமம் வசுந்தராவுக்கு சித்தப்பா முறை. மேலும் பிரேமுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் வேறு நெற்குன்றத்தில் உள்ளனர். மகளின் தகாத உறவை அறிந்த தந்தை ரமேஷ் மற்றும் சகோதர் கடுமையாக தாக்கி அவர்களை அங்கிருந்து அடித்து இழுத்துச் சென்றனர். ஆனால் போலீசார் வந்து வசுந்தராவை மீட்டனர்.