ஆத்மா பற்றிய பரிசோதனை முற்றியதால், விண்ணுலகம் சென்று உலகை ரசிக்கலாம் என்கிற ஆசையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணுலகம் செல்ல YOUTUBE வீடியோ பார்த்த இளம் பெண்! பிறகு நடந்த அதிர வைக்கும் விபரீதம்!
மும்பையில்தான்
இச்சம்பம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள போய்வடா பகுதியை சேர்ந்த 15 வயது இளம் பெண்தான்,
தற்கொலை செய்துகொண்டவர். ஷிராவாணி என்ற பெயருள்ள அந்த இளம்பெண், கடந்த சில
நாட்களாக, உடலில் இருந்து ஆத்மா பிரிவது பற்றியும், அதன்மூலமாக விண்ணுலகம் சென்று உலகை
சுற்றி பார்க்கலாம், பல வியப்பான விசயங்களை செய்யலாம் என்பது பற்றியும் பல
வீடியோக்களை யூ டியூப்பில் பார்த்து வந்துள்ளார்.
இதன்பேரில், கூடு
விட்டு கூடு பாய்வது போன்ற முயற்சிகளையும் அவர் மேற்கொள்ள முயன்றதாகக்
கூறப்படுகிறது. இதுபற்றி, அவரது குடும்பத்தினர் ஏற்கனவே கண்டித்துள்ளனர்.
இருந்தாலும், திடீரென ஷிராவாணி தற்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால்,
அதிர்ந்துபோன குடும்பத்தினர், இதுபற்றி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் போலீசார்
வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட சிறுமியின்
ஸ்மார்ட்ஃபோனில், ஆத்மா பற்றியும், ஆத்மாவின் பயணம் பற்றியும்,விண்ணுலகம் செல்வது
பற்றியும் பலவித வீடியோக்கள் இருந்துள்ளன. யூ டியூப்பில் இத்தகைய வீடியோக்கள் பல
பதிவேற்றப்படுகின்றன.
மாந்த்ரீகம், பில்லி சூனியம், ஜோதிடம்,
ஆத்மாவின் ரகசியம், கூடு விட்டு கூடு பாய்வது போன்ற வீடியோக்களை பார்த்து, பலரும்
ஏமாறுவது வாடிக்கையாகி உள்ளது. டெல்லியில் கூட மந்திரவாதி ஒருவர், ஒரே
குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை, இப்படி ஏமாற்றி தற்கொலை செய்ய வைத்தார். இதுபோன்ற
சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், இத்தகைய மோசடிகளை நம்பாமல் அனைவரும்
கவனமாக இருக்கும்படி, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் யூ ட்யூபில் உள்ள விண்ணுலக பயனம்,
ஆத்மா பயணம் போன்ற வீடியோக்களையும் அழிக்க
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. பல
பொய்யான, கற்பனையான தகவல்களை உண்மை என்று நம்பி மக்கள் உயிருடன் விபரீதமாக
விளையாடுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.