வீட்டு வாசலில் 17 வயது இளம் பெண்ணுக்கு 17 முறை சதக் சதக்! இளைஞனின் வெறிச் செயல்!

ஹைதராபாத்தில் தனது வீட்டின் அருகிலேயே ஒரு இளைஞனால் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


17 வயதான அந்த இளம் பெண் வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றான்.

 

இதில் ரத்தவெள்ளத்தில் தெருவில் விழுந்த பெண் தனது அம்மாவை அழைத்த நிலையில் வீட்டுக்குள் இருந்த தாய்க்கு மகளின் குரல் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து தற்செயலாக வீட்டுக்கு வெளியே வந்த தாய் தன் மகள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப் போனார்

 

அக்கம்பக்கதினர் உதவியுடன் மகளை மருத்துவமனையில் சேர்ந்த அவர், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்

 

காவல் துறையினரின் விசாரணையில் இளம் பெண்ணை கத்தியால் குத்திய நபர் 19 வயதான பரத் என தெரியவந்தது. அந்த நபர் பல மாதங்களாக இளம் பெண்ணின் பின்னால் சுற்றித் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

 

தலைமறைவான பரத்தை போலீசார் தேடி வருகின்றனர்இளம் பெண்ணின் கழுத்தில் 17 முறை கத்தியால் குத்தப்பட்டிருப்பதாலும், கைகளில் கடுமையான காயங்கள் இருப்பதாலும் ரத்த அழுத்தம் சீராக இல்லை என தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.