செல்ஃபி எடுக்க முயன்ற புதுமணத் தம்பதி! யானையால் நேர்ந்த விபரீதம்!

தாய்லாந்தில் குட்டி யானை சுற்றுலா பயணிகளிடம் குறும்பு செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தாய்லாந்தில் உள்ள சியாங் மை (Chiang Mai) யானைகள் சரணாலயத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. அங்குள்ள யானைகளின் ஈன்ற குட்டியும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

 

   இந்த யானைகளையும் பார்க்கவும், யானை குட்டிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஏராளமானவர்கள் வருவது வழக்கம். அதுவும் திருமணம் ஆன புதுமணத்தம்பதியினர் இந்த பூங்காவுக்கு அதிகம் வருவார்கள்.

 

   இப்படி பூங்காவை சுற்றி பார்க்க  வந்த ஒரு தம்பதி அங்கிருந்த 3 யானைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயன்றனர். யானைகளை முன்னே நிற்க வைத்து அந்த தம்பதி தங்கள் செல்போனில் செல்ஃபி எடுக்க ஆயத்தமாகினர்.

 

   அப்போது செல்பி எடுக்க முயன்ற பெண்ணை குட்டி யானை ஒன்று  தும்பிக்கையால் தள்ளிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சுதாரித்து எழுந்து கொண்டார். ஆனாலும் அந்த பெண் விடவில்லை.

 

   தனது கணவர் மூலமாக செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அவரையும்  தும்பிக்கையால் வளைத்த குட்டி யானை கீழே தள்ளியது. அதுமட்டும் இல்லாமல் அந்த நபருடன் குட்டி யானை விளையடவும் ஆரம்பித்துவிட்டது.

 

   செல்பி எடுக்க முயன்றவர்களுடன் யானை விளையாடும் காட்சி ரசிக்கும் வகையில் உள்ளது. இதை ஏராளமானோர் இணையதளத்தில் ரசித்து வருகின்றனர்.