திருத்தணி அருகே பள்ளி மாணவி எலும்பு கூடாக மீட்கப்பட்ட வழக்கில், அந்த மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது செய்யப்பட்டான்.
சிறுமி எலும்புக் கூடாக மீட்கப்பட்டதன் திடுக் பின்னணி! 5 நாட்கள் அடைத்து வைத்து 5 பேர் கற்பழித்த கொடூரம்!
கீச்சலம் என்ற கிராமத்தில் ஓடை ஒன்றில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் பள்ளி சீருடை, பை, ரிப்பன், காலணி, மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. அது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட புலனாய்வில்,
இறந்தது புதுவெங்கடாபுரத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி என உறுதி செய்யப்பட்டது.
அந்த மாணவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாயமான நிலையில் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் 5 மாதங்களுக்குப் பின் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சங்கரையா என்பவன் மாணவியை ஒருதலையாக காதலித்தது தெரிய வந்ததையடுத்து அவனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவன் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தான்.
இததைத் தொடர்ந்து அவனிடம் போலீசார் உரிய முறையில் விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது மாணவி கொலைக்கு காரணமானவன் சங்கரையாதான் என உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
துரத்தி துரத்தி காதலித்த தன்னை மாணவி ஏற்காததால் ஆத்திரமடைந்த சங்கரையா மாணவியை சீரழிக்கத் திட்டமிட்டதாகவும், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, வாயை பொத்தி பாழடைந்த கைவிடப்பட்ட பம்ப் செட் அறைக்கு கொண்டு சென்றதாகவும் போலீசார் கூறினர்.
அங்கு மாணவியை பாலியல் வன்கொட்டுமை செய்த அவன், பின்னர் தனது நண்பர்கள் 4 பேரையும் அழைத்து ஐந்து நாட்களாக அந்தப் பெண்ணை அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவன் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறான்.
இதனால் மாணவி இறந்ததையடுத்து உடலையும் உடைமைகளையும் ஓடையில் வைத்து புதைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சங்கரையா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அவனது நண்பர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர்.