12ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை! 76 வயது தொழில் அதிபரின் லீலை!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, 76 வயதான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் ஆத்தூரிலுள்ள வடக்கு உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர் கணவரை இழந்த கைம்பெண் வசந்தி. இவருக்கு 17 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.

கணவர் ராஜா, சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டதால் மகள் சுவாதியுடன் கைம்பெண் தனியாக வசித்து வந்தார். 17 வயதான மகள் ஆத்தூரிலுள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

(தாய், மகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது).சுவாதியின் தாய் வசந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால், தனது தாயின் தங்கையான சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வீட்டில் தங்கிப் படித்து வருகிறார் சுவாதி.

பிப்ரவரி 11 இரவு 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் மாணவி சுவாதி. தன்னுடைய சித்தி குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளரான 76 வயதாகும் நடராஜன் என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக, கூறியிருந்தார்.

வீட்டைச் சுத்தம் செய்யவும், தண்ணீர் எடுத்து வைக்கவும் அவ்வப்போது தன்னை நடராஜன் அழைத்து வேலை வாங்கியதாகத் தெரிவித்த

சுவாதி, அப்போது நடராஜன் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

தொழில் அதிபர் நடராஜன் சுவாதியிடம் வரம்பு மீறும் வீடியோவையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். நடராஜன் வரம்பு மீறுவதாக கூறினால் யாரும் நம்பமாட்டார்கள் என்பதால் செல்போனில் வீடியோ எடுத்ததாக சுவாதி தெரிவித்துள்ளார்.

 இதன் பேரில் தொழிலதிபர் நடராஜன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். இதனை அடுத்து 76 வயதான நடராஜனை போலீசார் காவல் நிலையத்திற்க அழைத்து வந்தனர்.

ஆத்தூரில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவத்தின் முகவராகச் செயல்பட்டு வருகிறார் நடராஜன். மனைவியை இழந்த இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்குப் பல இடங்களில் சொந்த கட்டடங்களும், வணிக நிறுவனமும், அடுக்கு மாடி வீடுகளும் உள்ளன.

இதன் மூலம், ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் அளவிற்கு நடராஜன் வாடகை பணமாக பெற்று வருகிறார். இந்த நிலையில் தான் பிளஸ் டூ மாணவியிடம் வரம்பு மீறி சிக்கியுள்ளார் நடராஜன்.