8 மாத கைக்குழந்தையை தண்ணீருக்குள் தூக்கி வீசிய இளம் பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ! ஆனால் அதன் பின்னர்?

அமெரிக்காவின் மாகாணம் ஒன்றில் வசித்து வருபவர் கிறிஸ்டா மெய்யர். இவரது எட்டுமாதக் குழந்தை ஆலிவர். தாய் ஒரு நீச்சல் பயிற்சியாளர்.


இவர் சில நாட்களுக்கு முன்னர் தனது எட்டு மாதக் குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி எறிகிறார். அந்த குழந்தை தண்ணீருக்குள் மூழ்குகிறது. இதை பார்க்கும் நீச்சல் குளத்தில் இருப்பவர்கள் பயப்படாமல் ஆரவாரத்துடன் கை தட்டுகிறார்கள். அந்த குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியதும், தாய் தண்ணீருக்குள் இறங்கி நிற்கிறார். அப்போதும் குழந்தையை எடுக்க முயற்சி செய்யவில்லை. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை கொடுக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தை தானாக மேற்பரப்புக்கு வருகிறது. அது கால்களையும், கைகளையும் அசைக்கிறது.

உடனே தாய் குழந்தையை தூக்குகிறார். இந்த வீடியோவை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவேற்றினார் தாய் கிறிஸ்டல் மெய்யர். இதற்கு அவர் தந்த விளக்கம், எதிர்காலத்தில் குழந்தை தண்ணீருக்குள் மூழ்கினால் இந்த நீச்சல் பயிற்சி உதவும் என்று சாதாரணமாக சொல்கிறார். இந்த வீடியோ சுமார் 75 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. இதனால் கிறிஸ்டா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார். இதை பார்த்த பலர் பெற்றக் குழந்தையை தாயே ஈவுஇரக்கமின்றி நீச்சல்குளத்தில் வீசி எறிந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவவித்துள்ளனர். சிலர் கொலை மிரட்டலே தாய்க்கு விடுத்துள்ளனர் என்றால் பாருங்களேன்.