பிறந்த நாள் கொண்டாட்டம்! 16 வயசு மாணவிக்கு மது விருந்து! பிறகு சக மாணவர்களால் ஏற்பட்ட விபரீதம்

16 வயதுச் சிறுமியை பிறந்தநாள் விருந்துக்கு அழைத்த சம வயது ஆண் நண்பர்கள் மதுவைக் கலந்துகொடுத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒன்றில் 16 வயதுச் சிறுமி நினைவிழந்து கிடந்ததைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் அந்த சிறுமியை மூர்ச்சை தெளிவித்து பெற்றோரிடம் சேர்த்தார். 

 

நினைவிழந்த காரணம் குறித்து பெற்றோர் கேள்வி எழுப்பிய போது முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்த சிறுமி பின்னர் பெற்றோர் கண்டிப்புடன் கேட்டபோது உண்மைகளை வெளிப்படுத்தினார். 

 

சிறுமியை அவரது டியூஷன் நண்பன் உள்ளிட்ட சமவயது ஆண் நண்பர்கள் சிலர் சிறுமியின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தத் தோட்டத்துக்கு விருந்துக்கு அழைத்துச் சென்றதாக சிறுமி தெரிவித்தார். இந்நிலையில் அவர்களில் ஒருவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்துகொடுத்ததால் நினைவிழந்ததாக சிறுமி கூறினார்.

 

நினைவிழந்தது வரை நடைபெற்ற சம்பவங்கள் சிறுமிக்கு நினைவு இருந்தன. அதன் பிறகு நடந்தது சிறுமிக்குத் தெரியவில்லை இது தொடர்பான பெற்றோரின் புகாரின் பேரில் டியூஷன் நண்பன் உள்ளிட்ட இருவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

   சிறுமிக்கு மதுவை கொடுத்து அவர் நினைவிழந்த பிறகு நண்பர்கள் மாறி மாறி அவரிடம் அத்துமீறியுள்ளனர். மேலும் அதனை செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.