இளையராஜா மகன் யுவன்சங்கர் ராஜாவை முஸ்லீமாக மாற்றியது எப்படி? 3வது மனைவி ஜஃப்ரூன் உடைத்த ரகசியம்!

இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவை முஸ்லிமாக மாற்றியது எப்படி என்று அவரது மூன்றாவது மனைவி ஜஃப்ரூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அவரைப் போலவே அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இசையில் புகழ் பெற்று விளங்கி வருகிறார். இளைஞர்கள் பலரும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வசப்பட்டு உள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. அந்தளவுக்கு அவரது இசையில் ரசிகர்கள் பலரும் மூழ்கி உள்ளனர் என்று தான் கூற வேண்டும். யுவன் சங்கர் ராஜாவிற்கு இந்த இரண்டு திருமணங்களும் சரியாக அமையவில்லை . ஆகையால் தன்னுடைய முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பின்னர் மூன்றாவதாக ஜஃப்ரூன் என்ற இஸ்லாம் மத பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜஃப்ரூன் எப்பொழுதும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருக்கக் கூடிய நபர் ஆவார். சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் விழாவில் பங்கேற்ற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்படியாக ரசிகர் ஒருவர் இப்படி இளையராஜாவின் மகனை மதம் மாற்றி விட்டீர்களே? என்று கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான ஜஃப்ரூன் அந்த ரசிகருக்கு பதிலளிக்கும் விதமாக புதிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த இந்த பதிவில், கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் சங்கர் ராஜா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு தழுவினார். மேலும் அவரது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். 

அவர் இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. சுமார் மூன்று ஆண்டுகளாக அவர் இஸ்லாம் மதத்தை பின்தொடர்ந்து வந்ததற்குப் பிறகுதான் அவர் எனக்கு அறிமுகமானார். இருப்பினும் அவர் எதற்காக இஸ்லாம் மதத்தை தேர்ந்தெடுத்தார் என்றால் அந்த மதம் அவருக்கு அதிகமாக பிடித்திருந்தது. யுவன்ஷங்கர் ராஜாவின் மிகப்பெரிய கேள்விகளுக்கு அவர் எதிர்பார்த்த பதில்களை குர்ஆனில் அவர் கண்டறிந்தார். சொல்லப்போனால் எங்களுடைய ஒரே எண்ணத்தின் அலைவரிசையின் மூலம்தான் நாங்கள் ஒன்று இணைந்தோம் என்றுதான் கூறவேண்டும். எங்களுடைய திருமணம் வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் எங்களுடைய கடந்த கால வாழ்க்கையில் நாங்கள் கடந்த வந்ததைப் பற்றியும் எதிர்கொண்டதையும் வாழ்க்கையில் தினமும் நிகழும் அற்ப வார்த்தை சண்டைகளையும் எங்களுடைய உரையாடல் மூலம் நாங்கள் தெளிவாக புரிந்து கொள்வோம். மேலும் ஒரு நாள் என் கணவரை நேரலையில் அழைத்துவந்து எதற்காக நீங்கள் இஸ்லாம் மதத்தை தழுவினார்கள் என்று உங்கள் முன்னிலையில் கேட்கப் போகிறேன். அதன் மூலம் நீங்களும் அவரது பதிலை கேட்டுக் கொள்ளலாம் என்று பதிவிட்டிருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மூன்றாவது மனைவியான ஜஃப்ரூன் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.