திருமணமாகி இருபதே நாள்! நடைபயிற்சி சென்றவர் வீட்டிற்கு சடலமாக வந்த பயங்கரம்! அதிர்ச்சி காரணம்?

திருமணம் முடிந்த 20 நாட்களிலேயே புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவமானது காஞ்சிபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் சாலைகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி இருந்தன. கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டிருந்த காரணத்தினால் தண்ணீர் சாலைகளில் நீண்ட நேரத்திற்கு தேங்கியிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே கருமேகம் சூழ்ந்திருந்தது. காஞ்சிபுரத்தில் உள்ள கூரம் கிராமத்தின் அரசமரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் கார்த்தி. கார்த்தியின் வயது 25. 

இவர் பாலுசெட்டிசத்திரம் பஜார் பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கான நிதி நிறுவனத்தை இயக்கி வந்துள்ளார். இவருக்கு 20 நாட்களுக்கு முன்னர் தான் திருமணமானது. இவர் தினமும் காலையில் ஏரிக்கரை பகுதியில் நடைபாபயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று இடியுடன் கூடிய மின்னல் கார்த்திக்கை தாக்கியது. தாக்கிய அடுத்த நொடியிலே அவர் தரையில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்திக் உயிரிழந்ததை அறிந்தவுடன் அவருடைய குடும்பத்தினர் கதறி அழ தொடங்கினர். இந்த சம்பவமானது அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.