17 வயது சிறுமியை அழைத்துச் சென்று 27 வயது இளைஞன் செய்த செயல்..! என்னாச்சு தெரியுமா?

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொள்ள முயன்ற இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி என்ற இடத்துக்கு அருகே ஆப்பக்கூடல் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள குப்பாண்டம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார்.

இருவரும் நன்றாக பேசி வந்துள்ளனர். பழக்கமானது நாளடைவில் நெருக்கமாக மாறியது. மேலும் சுபாஷ் பலமுறை அந்த இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்ள முயன்றுள்ளார். தொடக்கத்தில் மறுத்து வந்த அந்த இளம்பெண் சிறிது காலம் கழித்து தன்னுடைய நிலையை மாற்றி கொண்டுள்ளார்.

வீட்டில் யாரிடமும் தெரிவிக்காமல் சுபாஷிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பெண்ணின் நடவடிக்கைகளை கண்டு சந்தேகித்த பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் சுபாஷை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் சுபாஷ் மீது புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்திய பிறகு போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.