ஒரு கையில் செல்போன்! மறு கையில் பைக்! தலையில் நோ ஹெல்மெட்! அதிவேகத்தில் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

செல்போனில் பேசியபடி சென்ற இளைஞர் மரத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நொளம்பூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சக்திவேல் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்காக கொளத்தூருக்கு நண்பர்களுடன்  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

விழா முடிந்தவுடன் முகப்பேர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். பாடி மேம்பாலத்திற்கு அருகே 200 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சக்திவேலுக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிய அவர், தொடர்ந்து வாகனத்தை ஓட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் வாகனத்தின் மீது கவனம் செலுத்தாமல், செல்போன் உரையாடலில் கவனம் செலுத்தியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நேராக மரத்தின் மீது மோதியுள்ளது. 

மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்துள்ளார். மற்ற நண்பர்களை காவல்துறையினர் மீட்டுத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.