வெளிநாட்டில் வேலைக்குப் போன இளைஞன் கை விரல்களை இழந்த துயரம்! போலி பாஸ்போர்ட் பிரச்னை தீருமா?

போலி விசாவில் வெளிநாடு சென்ற இளைஞன் கைவிரல்களை தவித்து வருவதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளைஞன். மலேசியா செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த இவர் முகவர்கள் மூலம் முயற்சித்து வந்தார். முகவரிகள் இவருக்கு போலி பாஸ்போர்ட்டை தயார் செய்து கொடுத்து ஏமாற்றி விட்டனர்.

போலி பாஸ்போர்டை உபயோகித்து இவர் மலேசியாவிற்கு சென்று விட்டார். ஆனால் அங்கு இவரால் வாழ இயலவில்லை. வாழ்வாதாரமின்றி பசியும் பட்டினியுமாக தவித்து வந்துள்ளார். ஒரு வழியாக 6 மாத காலத்திற்கு முன்பு தொழிற்சாலை ஒன்றில் பணியில் சேர்ந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக 5 வாரங்களுக்கு முன்னர் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவருடைய கை விரல்கள் இயந்திரத்தில் சிக்கி துண்டித்துவிட்டன.

இவரிடம் முறையான பாஸ்போர்ட் இல்லாததால், தொழிற்சாலை நிர்வாகம் இவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காமல், தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓரளவு சரியான உடனே அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி விட்டனர். 

தற்போது எந்த வேலையும் செய்ய முடியாமல் மலேசியாவில் தவித்து கொண்டிருக்கிறார். இவருடைய செய்தியை அறிந்த தொண்டு நிருவனமானது இவருக்கு உதவி செய்ய முன்வந்தது. 

அதன்படி குறிப்பிட்ட ஒரு தொகையை சேகரித்து மலேசிய அரசின் உதவியுடன் அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட இளைஞர் என் தங்கை இருதய நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.