ஒரே ஒரு கப் பாதாம் பால்! இழக்க கூடாததை இழந்துவிடும் பெண்கள்! நாகர்கோவில் பரபரப்பு!

பாதாம் பாலில் மயக்க மருந்தை கலந்து பெண் அணிந்திருந்த நகைகளை இளைஞர் ஒருவர் திருடி சென்ற சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவிலில் பூதப்பாண்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனருகே ஈசாந்திமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய மனைவியின் பெயர் ராஜேஸ்வரி. இவர்களுக்கு சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷ் என்பவர் அறிமுகமானார்.

அவர் மேலபுத்தேரியை சேர்ந்தவராவார். அவருக்கு வயது 29. பல நாட்களாகவே ராஜேஸ்வரியிடம் அவர் நெருங்கி பழகி வந்தார். சில தினங்களுக்கு முன்னர் கடையிலிருந்து பாதாம் பால் வாங்கி வந்ததாக கூறி ராஜேஸ்வரி இடமளித்தார். அன்பாக அளிப்பதாக எண்ணிய ராஜேஸ்வரி அதனை பருகினார். பருகிய சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.

கண் விழித்து பார்த்த போது தான் உடலில் அணிந்திருந்த 5 1/2 சவரன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிலும் தாலியை காணவில்லை என்று கூறி அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் நிகழ்ந்தவற்றை கணவர் பாலாஜியிடம் கூறியுள்ளார். இருவரும் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி சந்தோஷ் மீது சந்தேகிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியுள்ளனர். இதே போன்று மேலும் சில பெண்களும்பாதாம் பால் அருந்திய பிறகு தங்கள் தாலி உள்ளிட்ட இழக்க கூடாத நகைகளை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவமானது பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.