17 வயது இளம் பெண் தலையை துண்டாக வெட்டி எடுத்து மறைத்து வைத்த 23 வயது அகமது ஷபாஸ்..! கேட்போரை பதற வைக்கும் காரணம்!

17 வயது இளம்பெண்ணின் தலையை வெட்டி முன்னாள் காதலர் கொலை செய்த கொடூரமானது ஸ்வீடன் நாட்டில் அரங்கேறியுள்ளது.


ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் வில்மா ஆண்டர்சன். இவருடைய வயது 17. இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை அகமது ஷபாஸ் என்ற 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். நன்றாக காதலித்து வந்த நிலையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட தொடங்கின. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்துள்ளனர்.

இருவரும் இனிமேல் நிச்சயமாக ஒன்று சேரமாட்டோம் என்று முடிவெடுத்துள்ளனர். அப்போது அகமது வீட்டிற்கு தன்னுடைய உடைமைகளை எடுத்து வருவதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று வில்மா ஆண்டர்சன் சென்றுள்ளார். 

ஆனால், அதன் பிறகு வில்மாவை காண இயலவில்லை என்று அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். காவல்துறையினரும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போதுதான் காவல்துறையினருக்கு அகமது மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டபோது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது வில்மா அகமது வீட்டிற்கு சென்றபோது, மீண்டும் இருவருக்கிடையே தகராறுகள் ஏற்பட்டுள்ளன. 

அதனால் ஆத்திரம் அடைந்த அகமது, வில்மாவை கொலை செய்துள்ளார். மேலும் அவருடைய தலையை தனியாக வெட்டி தன்னுடைய வீட்டிலேயே சிறிது காலம் வைத்திருந்துள்ளார். அதன் பிறகு தலையை வெளியே வீசியுள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 

அதுமட்டுமின்றி மற்ற உடல் பாகங்கள் எங்கெல்லாம் வீசப்பட்டு இருக்கின்றன என்பது தெரியாமல் காவல்துறையினர் தடுமாறி வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த காவல்துறையினர் வரும் 26-ஆம் தேதியன்று நீதிமன்றத்தின் முன் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்த செய்தியானது ஸ்வீடன் நாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.