மனைவியுடன் கள்ளக்காதல்! பெரியப்பா மகனின் குடலை உருகி கொலை செய்த கணவன் !

மதுரை


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த பெரியப்பா மகனை இளைஞர் ஒருவர் குடலை உருவி கொலை செய்துள்ளார்.

   மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூத்தியார் குண்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம். அப்பகுதியில் பிரேம் வெல்டிங் கடை வைத்துள்ளார். திருமணமான பத்தே நாளில் பிரேம் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்துள்ளார். வெல்டிங் கடை நடத்தி வந்ததுடன் மேலும் பல தொழில்களையும் பிரேம் செய்து வந்துள்ளார். இதனால் அவர் வசம் பணம் அதிகம் புழங்கியதாக கூறப்படுகிறது.

   இந்த நிலையில் பிரேமிடம் அவரது பெரியப்பான மகனான பிரகாஷ் என்பவர் கடன் பெற்றதாக கூறப்படுகிறது- கடனை வசூலிக்கச் சென்ற இத்தில் பிரகாசின் மனைவி சூர்யாவுடன் பிரேமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் கள்ளக்காதலாகியுள்ளது. பிரேம் தனது அண்ணன் முறை கொண்ட பிரகாசுக்கு தெரியாமல் அவரது மனைவியான சூர்யாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார்.

   இது குறித்து அரசல் புரசலாக கேள்விப்பட்ட பிரகாஷ், தனது மனைவி சூர்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும் சூர்யா பிரேம் உடனான கள்ளக்காதலை மறக்கவில்லை என்று சொல்லப்படுகிறது- இந்த நிலையில் கடந்த வாரம் சூர்யா, பிரேம் வீட்டுக்கே சென்று வந்துள்ளதை பிரகாஷ் கண்டுபிடித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து செல்போனை பறித்து அவரை வீட்டில் சிறை வைத்ததாக கூறப்படுகிறது.

   இதனை தொடர்ந்து தான் இனி பிரேமுடன் பேசப்போவதில்லை என்று சூர்யா உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரேமை அழைத்து இனி தன் மனைவியுடன் பழக கூடாது என்று பிரகாஷ் கூறியுள்ளார். ஆனாலும் கேட்காத பிரேம் தொடர்ந்து சூர்யாவுடன் பேச முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ், இன்று அதிகாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துக் கொண்டு பிரேம் வீட்டிற்கு பிரகாஷ் சென்றுள்ளார்.

  பிரகாஷ் கதவை பலமுறை தட்டியும் பிரேம் திறக்கவில்லை. இதனால் வீட்டின் மேல் ஏறிய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த பிரேமின் தாயாரை இழுத்துச் சென்று தனி அறையில் வைத்து பூட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து பிரேமை பிரகாஷ் ஆசை தீர அடித்து உதைத்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் தான் கொண்டு வந்த கத்தியை கொண்டு பிரேம் வயிற்றை கிழத்து குடலை வெளியே எடுத்துள்ளார்.

   இதனால் பிரேம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தப்பி ஓடிய பிரகாஷ் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.