கொடூர கொலை! நிர்வாணமாக்கப்பட்ட உடல்! நம்பி வந்த காதலிக்கு காதலனால் ஏற்பட்ட பயங்கரம்!

இளைஞர் ஒருவர் முன்னாள் காதலியை கொன்றுவிட்டு நிர்வாணமாக உடலை பிழைத்த சம்பவமானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்மேற்கு லண்டனில் 34 வயதான லாரலைன் கார்சியா என்ற பெண் வசித்து வந்தார். இவர் முன்னாள் பிரெஞ்ச் நாட்டு ஊடகவியலாளர் ஆவார். சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கும் கிரில் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் லாரலைன் கிரிலுக்கு பணம் கொடுத்துள்ளார். 

ஆனால் கிரில் பணத்தை திருப்பி தரவில்லை. பணத்தை திருப்பி தருவதாக கூறி கார்சியாவை ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் மர்மமான முறையில் கார்சியா கொலை செய்யப்பட்டிருந்தார். 

அப்போது கார்சியாவின் நண்பர்கள் காவல்துறையினரிடம் கிரில் மீது சந்தேகமிருப்பதாக கூறியுள்ளனர். அதாவது கார்சியாவின் மொபைலில் இருந்து தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி சந்தேகம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

கிரில் அதே மார்ச் மாதத்தில் பிரிட்டனிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பியுள்ளார். பல்வேறு நாடுகளில் கிரில் தேடப்பட்டு வந்த நிலையில், 6 நாட்களுக்கு முன்னர் எஸ்டோனியா நாட்டில் காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டார்.

முதலில் கொலை செய்யவில்லை என்று அடம்பிடித்தார். அதன்பின் காவல்துறையினர் நடத்திய டி.என்.ஏ சோதனையில் கொலைக்கும் கிரிலுக்கும் சம்பந்தம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

இதையடுத்து கிரில்லை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.