பட்டப்பகல்! பிரபல ஓட்டல்! குழந்தை, பெண் முன்னிலையில் அரங்கேறிய ரத்தத்தை உறைய வைக்கும் கொடூரம்! திருத்தணி திகுதிகு!

பட்டப்பகலில் இளைஞரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவமானது திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருத்தணியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உணவகம் ஒன்று அமைந்துள்ளது. இன்று  காலையில் வழக்கம் போல உணவகம் நடந்து வந்தது. திடீரென்று முகமூடி அணிந்து கொண்ட 4 நான்கு பேர் உணவகத்திற்கு நுழைந்தனர்.

உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த இளைஞரை நோக்கி பாய்ந்தனர். காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பல் இளைஞரை சரமாரியாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பதற்றத்தில் அனைவரும் ஓடிவிட, ஒரே ஒரு குடும்பம் மட்டும் அப்படியே சாப்பிட்ட இடத்திலேயே உட்கார்ந்திருந்தனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமால் கூலிப்படை சரமாரியாக வெட்ட குழந்தை ஒன்று வெறித்தபடி அந்த கொடூரத்தை பார்த்துக் கொண்டிருந்தது. 

பிறகு உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து உணவகத்தை விட்டு வெளியேறினர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

கொலை செய்யப்பட்ட இளைஞரின் யார் என்றும்?? எதற்காக அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதையும் காவல்துறையினர் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.