11 வயது மாமன் மகளுக்கு திருமணமான மாமன் மகனால் பட்டப்பகலில் ஏற்பட்ட பயங்கரம்! சென்னையை உலுக்கிய சம்பவம்!

இளைஞர் ஒருவர் 11 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவமானது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ஆதம்பாக்கம் எனும் இடம் அமைந்துள்ளது. பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவில் வேதவல்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு,மாதவன் என்று 2 மகன்கள் உள்ளனர். இதில் பாபு திருமணம் செய்துகொண்டு ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வருகிறார். 

வேதவல்லியின் தம்பியும், அவருடைய மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டனர். வேதவல்லியின் தம்பிக்கு ஷோபனா என்ற மகள் இருந்தாள். ஷோபனாவின் வயது 11. இந்நிலையில்ல் ஷோபனா படிக்க செல்லாமல், தன்னுடைய அத்தையான வேதவல்லிக்கு ஒத்தாசையாக இருந்து வந்தார். இதனால் வேதவல்லி ஷோபனாவின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். இந்த பாசமானது பாபுவுக்கு அறவே பிடிக்கவில்லை.

பாபு நிறைய முறை ஷோபனா குறித்து வேதவல்லியிடம் சண்டையிட்டுள்ளார். இன்று காலை யாருமில்லாத நேரத்தில் ஷோபனாவை பாபு மிரட்டியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. ஆத்திரமடைந்த பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷோபனாவை சரமாரியாக குத்தியுள்ளார். கழுத்திலும், வயிற்றிலும் சரமாரியாக குத்தியதில் சோபனா ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். பதறிப்போன பாபு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

வெளியே சென்ற வேதவள்ளி வீட்டிற்கு வந்து பார்த்தபோது சோபனா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஷோபனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர். வேதவல்லி மற்றும் அவருடைய மற்றொரு மகனான மாதவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.