மணமேடைக்கு வர லேட் பண்ணிய மணமகன்..! டென்சனில் வேறு ஒருவரை கணவனாக்கிய மணமகள்! கல்யாண வீட்டில் பகீர் சம்பவம்!

சரியான நேரத்திற்கு மணமகன் வராததால் மணப்பெண் வேறு ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு ஒரு இளைஞருடன் 2 வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் அன்று மணமக்களுக்கு சரியாக சடங்குகளை செய்ய இயலவில்லை என்று இருவீட்டாரும் நினைத்தால் நேற்று மீண்டும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அதாவது தொடக்கத்தில் மணமகன் வீட்டார் வரதட்சணை எதுவும் வேண்டியதில்லை என்று கூறியதாகவும், ஆனால் பின்னர் அவர்கள் பைக் மற்றும் பணத்தை வரதட்சணையாக கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்வீட்டார் உறவினர்களை தப்பி செல்லாமல் இருப்பதற்காக ஒரு அறையில் அடைத்துள்ளனர். பின்னர் அறையை திறந்து வைத்து பேசியதில் இருவரும் சமாதானமடைந்தனர். 

அதன் பின்னர் திருமணம் செய்து வைத்த மணமகன் வீட்டார் ஒப்புக்கொண்டுள்ளனர். மணமகன் நேற்று திருமணத்திற்கு வர அடம்பிடித்ததாக கூறப்படுகிறது.  இதனிடையே ஒருவழியாக மணமகனை சமாளித்து அவருடைய உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

ஆனால் அதற்குள் மணமகள் வேறொரு நபருடன் திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவமானது மணமகன் வீட்டாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் கொடுத்துள்ளனர். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவமானது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.