ஓயாமல் உல்லாசத்துக்கு அழைத்த கணவனின் தம்பி! 17 வயது சிறுவனுடன் சேர்ந்து அண்ணி அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள வையங்குடி என்னும் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். 26-ஆம் தேதியன்று இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக மணிகண்டனின் அண்ணியான காசியம்மாள் சரணடைந்தார்.

அவரிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. காசியம்மாளின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காசியம்மாளுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று போதையில் மணிகண்டன் காசியம்மாளிடம் வந்து உல்லாசமாக இருக்குமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காசியம்மாள் 17 வயதான உறவினர் இளைஞருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் காசியம்மாளுக்கு உதவியாக இருந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.