வீட்டின் முன்பு பழைய காதலியின் சடலம்..! கதறிய தாயார்..! சிங்கப்பூர் மாப்பிள்ளைக்கு புதுமனைவியுடன் ஜெயிலில் விருந்து..! தஞ்சை சம்பவம்!

தன்னை காதலித்துவிட்டு காதலர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டதால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவருடைய மகனின் பெயர் புகழரசன். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே ஊரை சேர்ந்த அருணா என்ற பெண்   சென்னையிலேயே வேறொரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த பெண்ணுடன் முகநூல் வாயிலாக புகழரசனுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கம் அதிகரித்து காதலாக மாறியது.

வேலை நிமித்தமாக புகழரசன் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரும் இருவரும் செல்போனில் தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இதனிடையே எதிர்பாராவிதமாக புகழரசனின் பெற்றோர் அவருக்கு வேறோரிடத்தில் பெண் பார்த்தனர். இதனால் புகழரசன் அருணாவுடனான தொடர்பை துண்டித்து கொண்டார்.

புகழரசனுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருக்கும் செய்தியை அறிந்த அருணா புகழரசன் வீட்டுக்கு முன்னால் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தன்னை காதலித்து புகழரசன் ஏமாற்றி விட்டதாக கூறி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருணா புகாரளித்தார்.

புகழரசன் வெளிநாட்டில் இருந்ததால் காவல்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் புகழரசனின் திருமணம் நடைபெற்றுள்ளது. என்னுடைய திருமண புகைப்படத்தை புகழரசன் அருணாவுக்கு செல்போனில் அனுப்பியுள்ளார். இதனை பார்த்த அருணா மனமுடைந்து போனார். உடனடியாக தன்னுடைய கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அருணா வெளியே வராததால் சந்தேகித்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது தங்கள் மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு வேதனையுற்றனர். மேலும் அருணா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், "தன்னுடைய சாவிற்கு புகழரசன் மட்டுமே காரணம்" என்று கடிதம் எழுதிவிட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

அருணாவின் பெற்றோர் உடனடியாக அருணாவின் உடலை புகழரசன் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வீட்டின் முன் சடலத்தை வைத்து, "மருமகனாக வர ஆசைப்பட்ட பெண்ணை, சடலமாக வர வைத்துள்ளீர்கள்"என்று கூறி அருணாவின் தாயார் கதறி அழுதார். சிலர் புகழரசன் வீட்டின் கண்ணாடியை கற்களால் அடித்து நொறுக்கியுள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.