50 அடி உயரம்.! ஆபத்தான உயர் மின் அழுத்த கோபுரம்! செல்ஃபி எடுக்க இளைஞர்கள் செய்த செயல்..! அதிர்ந்த தஞ்சை!

தஞ்சையில் ஆபத்தை உணராமல் மின் கம்பத்தில் அமர்ந்து தொழிலாளர்கள் செல்பி எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


தஞ்சை சிவகங்கை பூங்கா எதிரே அமைக்கப்பட்டிருந்த புதிய மின்கம்பத்தில் பல்பு பொருத்துவதற்காக ஏறிய தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் அதில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்தனர். சுமார் 50 அடி உயரம் கொண்ட மின் விளக்குக் கம்பத்தில் பாதுகாப்பின்றி அமர்ந்து கொண்டு தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அதற்குக் காரணம் பின்னால் இருந்த தஞ்சை பெரிய கோயில்தான். இதை பார்த்த பொதுமக்கள் எங்கே கீழே விழுந்துவிடுவார்களோ என்று பயந்தனர்.

மின் கம்ப உச்சிக்குச் சென்ற அந்த இளைஞர்கள் வட்ட வடிவிலான இரும்பில் அமர்ந்தனர். அவர்கள் உச்சியில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர்கள் என்றாலும், தற்போது பெரிய கோயிலுக்கு அருகில் வேலை செய்ததால் உச்சியில் இருந்து பெரிய கோயிலைக் கண்டதுமே ஆர்வ மிகுதியில் செல்ஃபி எடுத்துள்ளனர்.

உயர் மின் விளக்கு அமைக்கப்படும் இடம் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் பயம் எதுவுமின்றி எதிர்வரும் ஆபத்தை உணராமல் இப்படி செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களைக் கவனித்த சிலர் பதற்றமடைந்தனர். பொதுமக்கள் சிலர் விடுத்த எச்சரிக்கையும் அவர்கள் பொருட்படுத்த விரும்பிவில்லை. தங்களுக்கு விருப்பம் போல் அனைத்து போட்டோக்களையும் எடுத்த பிறகு மின்கம்பத்தில் பல்பு பொருத்திவிட்டு பின்னர் இறங்கினர்.