உன்னுடைய அது கோணலாக உள்ளது..! மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்! விபரீத கணவன்!

இஸ்லாமிய கணவர் ஒருவர் மனைவியின் பல்வரிசை சரியில்லாததால் முத்தலாக் கொடுத்திருப்பது ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஹைதராபாத் மாநகரில் முஸ்தபா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்காக 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், 50 சவரன் நகையும் கேட்டுள்ளனர். அதனை பெண் வீட்டார் முஸ்தபாவின் குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் பெண்ணின் தம்பியின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு முஸ்தபா அதனை திருப்பி தரவில்லை. 

இதனிடையே, திருமணத்திற்கு பிறகு முஸ்தபாவின் குடும்பத்தினர், அந்த பெண்ணிடம் பணமாகவும் நோக்கமாகவும் இன்னும் நிறைய வரதட்சணையை எடுத்து வருமாறு கொடுமைப்படுத்தியுள்ளனர். 10-15 நாட்களுக்கு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தனர். திருமணத்திற்கு முன்னர் முஸ்தபாவின் குடும்பத்தினர் தங்களை பணக்காரர்களை போன்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் முஸ்தபா ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்று அவருடைய மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இறுதியாக முஸ்தபா தன் மனைவியின் பல்வரிசை கோணலாக இருக்கிறது என்பதற்காக அவரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தன் தாய் வீட்டிற்கு சென்று அந்த இளம்பெண் அங்கேயே வாழ தொடங்கியுள்ளார். சென்ற மாதம் 1-ஆம் தேதியன்று, முஸ்தபா தன் மனைவியின் வீட்டிற்கு சென்று அனைவரையும் இழிவாக பேசியுள்ளார். மேலும் முத்தலாக் அறிவித்துவிட்டு முஸ்தபா அங்கிருந்து திரும்பியுள்ளார்.

குஷலகுடா பகுதியில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் முஸ்தபாவை கைது செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகின்றனர். திடீரென்று முத்தலாக் அறிவித்தால் 3 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியானது ஹைதராபாதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.