இந்த மண்ணுளிப் பாம்பின் விலை ஒன்றே கால் கோடி..! அசர வைக்கும் காரணம்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் மண்ணுளி பாம்பை சட்டவிரோதமாக ரூபாய் 1.25 கோடிக்கு விற்க முயன்ற 5 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டுள்ளனர்.


மண்ணுளி பாம்பானது மருந்துப்பொருள் தயாரிப்பதற்கும் ஒப்பனை பொருள் தயாரிப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பலரும் மண்ணுளிப் பாம்பை நாடி வரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள நர்சிங்கார் பகுதியில் வசித்து வரும் ஐந்து பேர் கொண்ட வாலிபர்கள் மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். 

இந்த இளைஞர்கள் மண்ணுளி பாம்பை விற்பனை செய்யப் போகிறார்கள் என்ற தகவல் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போலீசார் மண்ணுளி பாம்பை விற்கும் அந்த இளைஞர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சோதனையிட்டுள்ளனர். சோதனையின் போது சுமார் ரூபாய் 1.25 கோடி மதிப்பிலான மண்ணுளி பாம்பை அவர்கள் பிடித்தனர் . பின்னர் அங்கிருந்த 2 சிறுவர்கள் உட்பட 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது காவல்துறையினர் அவர்கள் 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.