செஞ்சி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ள விபரீத போதை ஊசி! பணம் கொழிக்கும் மெடிக்கல் ஷாப்புகள்!

போதை சுகத்தில் விழுப்புரம் மாவட்டத்து இளைஞர்கள் ஈடுபடுவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து ஏற்றிக்கொண்டு உல்லாச சுகத்தை அனுபவிக்கும் அபாயகரமான செயல் பெருகி வருகின்றது.


வினோத போதை கலாச்சாரத்தில் விழுப்புரம் மாவட்ட இளைஞர்கள் சிக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அமைந்துள்ளது. மலைகள் மற்றும் காடுகளில் இளைஞர்கள் கூட்டம் செய்யும் அட்டூழியத்தை சகித்து கொள்ள இயலவில்லை. பல்வேறு போதை பொருட்களை மலையடிவாரத்திற்கும், அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கும் எடுத்து சென்று போதை சுகத்தை அனுபவிக்கின்றனர். 

தற்போது ஒரு புதிய முறையில் இந்த இளைஞர்கள் உல்லாச சுகத்தை அனுபவிக்கின்றனர். மருந்து கடைகளில் கிடைக்க கூடும் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீர் போன்ற நீர் சம்பந்தப்பட்டவற்றில் கரைத்து, ஊசி சிரிஞ்ச் மூலம் எழுத்து தங்கள் உடலினுள் செலுத்தி கொள்கின்றனர்.

இந்த அபாயகரமான செயலானது விழுப்புரம் மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் காணப்படுகின்றது. இந்த அபாய காரியம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை அறிய முற்பட்டபோது, இளைஞர் ஒருவர் தகுந்த விளக்கம் அளித்தார்.

அதாவது இந்தியாவின் உணவு மற்றும் மருந்து ஆய்வகம் தடை செய்த பிரபல மருத்துவ நிறுவனத்தின் வலி நிவாரண மாத்திரைகளை பொடியாக்கி தண்ணீரில் கரைத்து சிரின்ஜினுள் ஏற்றி ஊசி மூலம் உடலில் செலுத்தி கொள்வோம் என்று கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட மருந்தானது திருவண்ணாமலையிலுள்ள பிரபலமான மருந்து கடையான அன்பு மெடிக்கல்ஸில் விற்கப்படுகிறது என்று கூறியதோடல்லாமல் அவரே சென்று அதை வாங்கியும் காண்பித்தார்.

கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் எந்த மருத்துவச்சீட்டுமின்றி, தடை செய்யப்பட்ட மருந்தினை கேட்டார். சிறிதும் சல்லாபமின்றி அந்தப் பெண் அந்த மருந்தை எடுத்து கொடுத்தார். மருத்துவர்களிடம் விசாரித்தபோது தகுந்த மருத்துவர்களின் மருத்துவ சீட்டின்றி இந்த மருந்தினை விற்கக்கூடாது, இந்த மருந்தினை நிறைய இளைஞர்கள் தவறான வழியில் உபயோகிக்க கூடும் என்பதனை அறிந்து ஆய்வகம் இதனை தடை செய்துள்ளது என்று கூறினர்.

திருவண்ணாமலையில் 250 முதல் 500 ரூபாய் வரையில் இந்த மாத்திரைகளை பெற்றுக்கொண்டு பிற இடங்களில் ஒரு அட்டையை 2,000 வரை விற்கின்றனர். போதைக்கு அடிமையான இளைஞர்கள் சுகத்தை அனுபவிப்பதற்காக எவ்வளவு விலை கொடுத்து வாங்கவும் தயாராக உள்ளனர். காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவியும், மாதந்தோறும் நடைபெறும் மருந்து கடையில் ஆய்வு நடைபெறும்.

ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்து இத்தகைய வேலைகளில் சில மருந்துகடையினர் ஈடுபடுகின்றனர். பல்வேறு மருத்துவ குற்றங்களுக்கு