கூட்டிட்டு வாங்கடா உங்க சீமான..! கத்தியுடன் மெட்ராஸ் புள்ளிங்கோ விடுத்த மிரட்டல்! டிக் டாக் வீடியோவால் நேர்ந்த விபரீதம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மிரட்டும் விதமாக இளைஞர்கள் 5 பேர் இணைந்து டிக்டாக்கில் மிரட்டல் விடுக்கும் விதமாக கத்தியை காட்டி பாடல் பாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் செயலி யானது பிரபலமான ஒன்றாகும் . இதில் வரும் பாடல் காட்சிகளுக்கு நடித்து அதை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்வது வழக்கமாக பலரும் கொண்டுள்ளனர் . அந்த வகையில் இளைஞர்கள் 5 பேர் இணைந்து நாம் தமிழர் கட்சி சீமானை, பட்டா கத்தியை காட்டி கொலை மிரட்டல் செய்துள்ளனர்.

மணி ,சுரேஷ், கிஷோர், அஜித், நிஷாந்த் ஆகிய ஐந்து பேரும் இணைந்து சீமானை பட்டாகத்தியை காட்டி டிக் - டாக்கில் "கூப்ட்டு வாங்கடா உங்க சீமான" என சீமானை மிரட்டி பாடலை பாடியுள்ளனர். தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இதனை பார்த்த நாம் தமிழர் கட்சியினர் அந்த 5 பேர் மீது கடும் சினம் கொண்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த இளைஞர்கள் 5 பேரையும் தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர்.