வாங்க நான் ஸ்கூல்ல இறக்கி விட்டுறேன்! நம்பி ஏறிய குழந்தைகள்! ஆனால் இளைஞன் அரங்கேற்றிய பயங்கரம்!

பள்ளி குழந்தைகளை இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் கடத்த முயன்ற சம்பவமானது பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருவள்ளூரில் பொன்னேரி என்னும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே ஏரிமேடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ என்ற மகளும், அருண் என்ற மகளும் உள்ளனர்.

இருவரும் அனுப்பம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற குழந்தைகளை அவ்வழியில் வந்த இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று விடுவதாக கூறியுள்ளார். அவரை நம்பி குழந்தைகளும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

ஆனால் அந்த இளைஞன் அவர்களை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ள ‌ இதனை கண்ட சக மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோரிடமும் காவல்துறையினரிடமும் தகவலை தெரிவித்தனர்.

காவல்துறையினரும் கிராமத்து மக்களும் பல்வேறு இடங்களில் குழந்தைகளை சென்று தேடினர். 3 மணி நேரமாக தேடிய பின்னர் அந்த இளைஞரை பொதுமக்கள் கண்டுபிடித்தனர். 

விசாரணை நடத்தியதில் அந்த இளைஞன் கேசவபுரத்தை சேர்ந்த சுகுமார் என்பது தெரியவந்துள்ளது. அவர் கஞ்சா போதையில் இருந்ததால் குழந்தைகளை திருடி செல்ல முயன்றாரா என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.