என் காதலியின் நிர்வாணப் படங்கள்! இது எப்படி இருக்கு? பேஸ்புக்கில் அதிர வைத்த இளைஞன்! கோவை பரபரப்பு!

திருமணம் செய்து கொள்ள மறுத்த கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொடைக்கானல் பகுதியை சேர்ந்த அஜித் குமார் திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது பள்ளியில் படித்த ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்தப் பெண்ணிடம் பேசி அவரது மொபைல் நம்பரையும் அந்த இளைஞர் வாங்கியுள்ளார்.

அந்தப் பெண் கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே சூலூரில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்தும் வருகிறார். தொலைபேசியில் பேச ஆரம்பித்த இவர்கள் இருவரும் நன்றாக பேசி , பழகி காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் அந்தப் பெண் அஜித்குமாருக்கு தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார். 

இதனை அடுத்து சிறிது காலம் கழித்து அஜித்குமாரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததுள்ளது. இதனால் அந்த பெண் அவருடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திவிட்டார். இதனால் கோபமடைந்த அஜித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டார். 

இதையறிந்த அந்த கல்லூரி மாணவி அதிர்ச்சியில் ஆழ்ந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த பெண்ணின் புகாரை ஏற்ற போலீசார் அஜீத் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டதால் அந்த இளைஞரின் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.