ச்சீ நீ இப்படி பட்டவனா? மாலையை கழட்டி மணமகன் மூஞ்சில் வீசிய மணமகள்! திருமண மேடையில் அரங்கேறிய திகில் சம்பவம்!

திருமணம் நடந்து முடிந்த சில நிமிடங்களிலேயே குடித்து கலாட்டா செய்ததால் மணமகள் மணமகனை ஓங்கி அறைந்து விட்டு பிரிந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு இளம்பெண் ஒருவருடன் வீட்டு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் திருமண விழாக்களின் போது பாம்பு நடனம் ஆடுவது வழக்கம் . அந்த வகையில் இந்த திருமணத்திற்கு வந்த மணமகனின் நண்பர்கள் ஒன்றிணைந்து மணமகனை பாம்பு நடனம் ஆடுவதற்கு அழைத்துள்ளனர்.

அப்போது அவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த மணமகன் தள்ளாடி கீழே விழுந்து இருக்கிறார். கீழே விழுந்த அவர் நீண்ட நேரமாகவும் தரையில் படுத்தபடி தள்ளாடிக் கொண்டு பாம்பு நடனமாடிக் கொண்டிருக்கிறார் . இதனை பார்த்த மணமகளுக்கு அவர் நடனமாடுகிறாரா? அல்லது போதையில் தள்ளாடுகிறாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவரை விசாரித்தபோது அவர் திருமணத்திற்கு முன்பே மது அருந்தியதாகவும் தாலி கட்டியபோது கூட போதையில் தான் இருந்ததாகவும் தெரிய வந்தது . இதனைக் கேட்ட மணப்பெண் வீட்டார் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். உடனே திருமண விழா நடைபெறும் அரங்கமே மிகப்பெரிய சண்டை களமாக மாறியது .

இதனை அடுத்து மணப்பெண் மணமகனை விட்டு பிரிவதற்கு முடிவுசெய்து மாலை கழற்றி மணமகனின் மூஞ்சில் வீசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அப்போது மணமகன் அந்தப் பெண்ணை எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அந்த பெண் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் மணமகளின் கண்ணத்தில் மணமகன் ஓங்கி அறைந்தார்.

இதனால் மேலும் அந்த இடம் மிகப்பெரிய போர்க்களமாக மாறியது தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதற்குப் பின்பு பெண் வீட்டாரால் கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் வரதட்சணை ஆகியவை அவர்களிடமே திருப்பி அளிக்கப் பட்டது. இதனை பெற்றுக்கொண்ட மணமகள் வீட்டார் அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினர்.