ஆண் உறுப்பு வழியாக சார்ஜர் வயரை உடலுக்குள் சொருகிய இளைஞர்..! அதற்கு அவர் சொன்ன அடச் சீ காரணம்..! அதிர்ந்த டாக்டர்கள்!

சுய இன்பத்திற்காக ஆணுறுப்பு வழியாக சார்ஜர் ஒயரை உடலுக்குள் சொருகிய இளைஞரின் உடலை அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அவர்கள் அந்த சார்ஜர் ஒயரை வெளியே எடுத்துள்ளனர்.


அசாமை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், தன்னுடைய சுய இன்பத்திற்காக ஆணுறுப்பு வழியாக செல்போன் சார்ஜர் வரை உள்ளே நுழைந்திருக்கிறார். இவருக்கு பொதுவாகவே சார்ஜர் ஒயரையும் கேபிள்களையும் ஆண்குறி க்குள் நுழைத்து சுய இன்பம் காணும் பழக்கம் இருந்துள்ளது. அப்படியாகத்தான் சம்பவ தினத்தன்றும் சார்ஜர் ஒயரை சுய இன்பத்திற்காக ஆண் குறிக்குள் செலுத்தி இருக்கிறார். அப்படியாக அவர் சுய இன்பம் காணும் பொழுது அந்த சார்ஜர் ஒயரானது அவரது சிறுநீரகத்திற்குள் சென்று விட்டது.

இதனால் அந்த இளைஞர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்குப் பின்பு அவர் மருத்துவமனையை நாடி இருக்கிறார். மருத்துவமனையில் தான் வாய் வழியாகத்தான் சார்ஜர் ஒயரை உட்கொண்டதாக மருத்துவர்களிடம் பொய் கூறியிருக்கிறார். இதனை அடுத்து மருத்துவர்கள் அவருக்கு எண்டோஸ்கோப்பி செய்து பார்த்துள்ளனர். மேலும் மலம் பரிசோதனையும் செய்துள்ளனர். ஆனால் எந்த பரிசோதனையிலும் அவர் விழுங்கியதாக கூறப்பட்ட சார்ஜர் ஒயரை மருத்துவர்களால் கண்டறிய இயலவில்லை. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து இரைப்பையை சோதனை செய்து பார்த்தனர். அதிலும் இல்லை என்பதை அறிந்த மருத்துவர்கள் குழப்பம் அடைந்தனர்.

உடனே அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது இளைஞருக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே செய்து பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த சார்ஜர் ஒயர் அந்த இளைஞரின் சிறுநீரகத்திற்குள் உள்ளது என்பதை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தவர்கள் சிறுநீரகத்தில் இருந்து 2 அடி நீளம் கொண்ட சார்ஜரின் ஒயரை வெளியே எடுத்தனர். தற்போது அந்த இளைஞரின் உடலும் நன்கு தேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் வல்லியுல் இஸ்லாம் பேசுகையில், அவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நான் கடந்த 25 ஆண்டு காலமாக அறுவை சிகிச்சை செய்து வருகிறேன். இம்மாதிரியான சம்பவத்திற்கு அறுவை சிகிச்சை செய்தது இதுவே முதல் முறையாகும். சார்ஜர் ஒயரை உடலுக்குள் செலுத்தி ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் அந்த நபர் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனைக்கு வந்த அவர் மருத்துவர்களிடம் உண்மையை கூறியிருந்தால் சார்ஜர் ஒயரை அவர் எப்படி செலுத்தினாரோ அதே வழியில் நாங்கள் வெளியே எடுக்க முயற்சி செய்திருப்போம். இதன்மூலம் அறுவை சிகிச்சையை தவிர்த்திருக்கலாம்.

ஆனால் அவர் கடைசிவரை உண்மையை மறைத்து எங்களிடம் பொய் கூறி விட்டார். அதனால்தான் நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டோம். மேலும் பேசிய அவர் அந்த இளைஞருக்கு மனநலம் நன்றாக இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். முற்றிலும் அவருடைய தனிப்பட்ட சுய இன்பத்திற்கு ஆகவே அவர் எந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார் எனவும் மருத்துவர் இஸ்லாம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.