முகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை பரவ விட்டு இளைஞர் செய்த செயல்..! என்ன, எதற்கு தெரியுமா?

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய முகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை பரவவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


நேச்சர் எம்எஸ் என்ற இளைஞர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 24. சிறுவயது முதலே தேனீக்களின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர் இவர். தேனீக்களின் மீது இவருக்கு இவ்வளவு ஆர்வம் வருவதற்குக் காரணமே அவரது தந்தை தானாம்‌. தற்போது நேட்சர், வசித்து வரும் பகுதியில் தேன் உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த 2018ம் ஆண்டு இவர் பல சாதனைகளை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இளைஞர் தன்னுடைய சிறுவயதில் தனது நண்பர்களை கவர்வதற்காக முதலில் கைகள் கால்களில் தேனீக்களை பரவவிட்டு இருக்கிறார்.

நாளடைவில் இந்த பழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் அவருடைய மாநிலத்தில் பிரபலமான நபராக வலம் வர ஆரம்பித்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞர் அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதாவது அந்த இளைஞர் நேட்சர், தன்னுடைய முகம் முழுவதும் 60 ஆயிரம் தேனீக்களை பரவவிட்டு புதிய சாதனை மேற்கொண்டிருக்கிறார். சரியாக 4 மணி நேரம் 10 நிமிடம் 5 வினாடிகள் அவர் அந்த தேனீக்களை தனது முகம் மற்றும் தலை ஆகியவற்றை முழுவதுமாக மறைத்து சாதனை புரிந்திருக்கிறார். 

தற்போது இந்த இளைஞர் செய்துள்ள இந்த சாதனையானது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மட்டுமல்லாமல் இளைஞர் நேட்சர் செய்த இந்த சாதனையின் போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். கின்னஸ் சாதனை புரிந்த அந்த இளைஞருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.