காதலிச்சோம்.. நம்பி கூட போனேன்.. இப்போ கர்ப்பமாகிட்டேன்! வினீத் தான் காரணம்..! கதறும் தூத்துக்குடி பெண்!

தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி கற்பழித்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி கற்பழித்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என்று அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் என்ற பகுதி அமைந்துள்ளது . இந்த பகுதியில் வினித் (வயது 25) என்ற ஒரு இளைஞர் வசித்து வருகிறார் . இவர் தூத்துக்குடி கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அந்தக் கல்லூரி மாணவியை வினித் காதலிப்பதாக கூறி பலவந்தமாக கற்பழித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கற்பழித்த போது அதனை வீடியோவாக தன் செல்போனில் வினித் பதிவு செய்திருக்கிறார். இதை பற்றி வெளியே கூறினால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி வந்திருக்கிறார்.

இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் வெளியே கூறாமல் மறைத்து வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வினித் செய்த செயலால் ஆத்திரத்தில் இருந்த அந்த பெண் தூத்துக்குடியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதனடிப்படையில் வினைத் மீது கடந்த 8 ஆம் தேதியன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வினித் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப்பெண் குற்றம்சாட்டி இருக்கிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சென்று அந்தப் பெண் மீண்டும் புகார் அளித்திருக்கிறார். 

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இன்னும் மூன்று நாட்களில் விரதமிருந்து அந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றி விடுவோம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் வீட்டை கைது செய்யுமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளனர். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.