நடுரோட்டில் ஆண் எஸ்ஐக்கு உதட்டு முத்தம் கொடுத்த இளைஞன்! அசர வைக்கும் காரணம்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

எதிர்பாராதபோது ஆண் எஸ்.ஐ. ஒருவருக்கு இளைஞர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவமானது ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஆந்திரா மாநிலத்தில் போனலு என்னும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. போனலு என்பது தேவி மகாகாளியை போற்றும் வகையில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழாவானது வருடந்தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் பெண்கள் பொங்கல் மற்றும் இதர இனிப்பு வகைகளை தயார் செய்து கடவுளுக்கு படைப்பார்கள். இரவு பொழுதுகளில் ஆண்கள் ஆடிப்பாடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துவர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த இந்த திருவிழாவின்போது இளைஞர் ஒருவர் செய்த காரியம் அப்பகுதியில் இருந்தோரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  

ஹைதராபாத் பகுதியில் இளைஞர்கள் கூட்டமாக ஆடியும் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். அப்போது உணர்ச்சி மிகுதியால் அருகிலிருந்த ஆண் எஸ்.ஐ.க்கு   முத்தமிட்டு உள்ளார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறை ஆய்வாளர் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அருகிலிருந்தோர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இளைஞரின் செயலை கண்டித்து கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.