என் மகன் தான் ஆக்சிடன்ட்ல செத்துட்டான்..! நீங்களாவது! நினைவு நாளில் ஹெல்மெட் தானம் செய்த தந்தை! நெகிழ்ச்சி செயல்!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


லக்கி தீட்சித் (25 வயது) கடந்த நவம்பர் 20ம் தேதி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். தலைக்கவசம் அணியாததால் அந்த இளைஞரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது.

இந்நிலையில் இறந்துபோன அந்த இளைஞரின் நினைவாக அவரது தந்தை இரங்கல் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த இரங்கல் கூட்டத்தில் அக்கம்பக்கத்தினர், உறவினர், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் லக்கி தீட்சித்தின் தந்தை தானமாக ஹெல்மெட்டை வழங்கினார். தன்னுடைய மகன் ஹெல்மெட் அணியாததால் தான் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிர் இழந்து விட்டான். 

ஆகையால் இது போல் மற்றவரும் தலைக்கவசம் அணியாமல் இருக்கக் கூடாது எனுவும் கட்டாயம் இருசக்கர வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் இரங்கல் கூட்டத்திற்கு வந்து அனைவரிடமும் கனிவாக கேட்டுக்கொண்டார்.

இளைஞரின் தந்தை செய்த இத்தகைய செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தன் மகனை இழந்து தான் படும் வேதனையை மற்றவர்கள் படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு லக்கி தீட்சித்தின் தந்தை ஹெல்மட்டை தானமாக அனைவருக்கும் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.