போலீஸ் ஆகனும்னு ஆசை! ஆனா உயரம் பத்தல..! அதுனால மண்டைக்குள்ள அதை வச்சேன்! அதிகாரிகளை அதிர வைத்த திருச்செங்கோடு தயா!

பபுள்கம்மை பயன்படுத்தி உடற்தகுதி தேர்வில் நூதன மோசடியில் ஈடுபட்ட இளைஞரை அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றம் செய்தனர்.


சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவல் துறை அதிகாரிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வானது கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்பதற்காக 400க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை என்னும் இடத்தை சேர்ந்த தயாநிதி என்ற ஒரு இளைஞரும் இந்தத் தேர்வில் பங்கேற்று இருந்தார். 

தயாநிதிக்கு உயரம் அளவிடும் தேர்வு நடை பெற்றபோது தலையில் ஒரு பகுதியில் மட்டும் சற்று வீங்கி இருப்பது போல் காட்சி அளித்திருக்கிறது . அதனை பார்த்து அதிகாரி ஒருவர் சந்தேகத்துடன் தயாநிதி இடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் தயாநிதியின் தலையை தொட்டு பார்த்தபோது அவள் தலையின் ஒரு பக்கத்தில் பபுள்கம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த பயன்படுத்தி உயரம் சற்று அதிகமாக இருப்பது போல் காட்டுவதற்காக இந்த இளைஞர் இந்தவிதமான மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தயாநிதி இந்த உடல் தகுதி தேர்வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.