பைக்கில் அதிவேகம்! ஹெல்மெட் இல்லை! லாரிக்கு பின்னால் சென்று சொருகிய நிர்மல்! பதை பதைக்க வைக்கும் விபத்து!

டேங்கர் லாரி ஒன்றிற்குள் இருசக்கர வாகனம் நுழைந்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் முகப்பேர் என்னும் இடத்தில் திருவள்ளுவர் தெரு அமைந்துள்ளது. அங்கு சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மகனின் பெயர் நிர்மல். நிர்மலின் வயது 18. மறைமலை நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். 

நேற்று கல்லூரி முடிந்தவுடன் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவை சேர்ந்த பெண்ணி என்ற நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தனர். நிர்மல் வாகனத்தை ஓட்டி சென்றார்.

போரூர் ஏரி அருகே சமையல் கியாஸ் ஏற்றி செல்லும் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பகுதிக்கு அருகே நிர்மல் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார்.

இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்று லாரியின் பின்புறத்தில் மோதியது. அதிவேகமாக வந்ததால் இருசக்கர வாகனமானது லாரியினுள் புகுந்தது. சம்பவ இடத்திலேயே நிர்மல் உயிரிழந்தார். பென்னி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி காவல் துறையினர் டேங்கர் லாரி ஓட்டுநரான சுப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவம் காசிமேடு அருகே நிகழ்ந்துள்ளது. காசிமேடு பகுதி இந்திரா நகரில் பாரதி என்ற 39 வயது ஆண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.

தன்னுடைய மனைவியை மாமியார் வீட்டிலிருந்து அழைத்து வருவதற்காக இருசக்கர வாகனத்தில் புதுவண்ணாரப்பேட்டை சென்று கொண்டிருந்தார். ஜீவா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது துரதிஷ்டவசமாக நிலைதடுமாறி நடுரோட்டில் கீழே விழுந்தார். 

அதிவேகத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி அவர் மீது ஏறி சென்றதில் சம்பவ இடத்திலேயே பாரதி உயிரிழந்தார். விபத்தை நிகழ்த்திய டாங்கர் லாரி ஓட்டுநரான கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்விரு விபத்துகளும் நேற்று சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.