தினேஷ்! ராமகுரு! தீன தயாளன்! ஒரு பெண்ணுக்கு ஒரு பெயர்! காக்கி யூனிபார்மில் வலம் வந்த மன்மதராஜா!

போலீஸ் வேடமிட்டு இளம்பெண்ணை கடத்திய இளைஞன், பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் ராஜேஷ் பிரித்வி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் 22 வயதான இளம்பெண் ஜூன் மாதம் 30-ஆம் தேதியன்று காணாமல் போயுள்ளார். 

உடனடியாக அவருடைய உறவினர்கள் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணை காணவில்லை என்று புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்த தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண்ணை அதே நிறுவனத்தின் உரிமையாளரான ராஜேஷ் பிரித்வி என்பவர் கடத்தி சென்றதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். 

மேலும் விசாரணை நடத்திய போது அந்த பெண் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிபாளையத்தில் இருப்பதே காவல்துறையினர் கண்டறிந்தனர். உடனடியாக சென்று அங்கிருந்த பெண்ணை மீட்டனர். ஆனால் ராஜேஷ் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதனிடையே அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது, தன்னை ஒரு வீட்டிற்குள் வைத்து அடைத்து ஒரு வாரகாலமாக ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

காவல் துறையினர் கடந்த ஒரு வாரமாக ராஜேஷை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை காட்டிக் கொடுத்தாள் அனைவரையும் கொன்று விடுவதாக ராஜேஷ் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று ராஜேஷை மடக்கிப்பிடித்தனர். 

பின்னர் சென்னை எழும்பூரில் அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் போலி காவல் சீருடைகள், போலி காவல்துறை அட்டைகள் இருந்துள்ளன. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ராஜேஷிடம் விசாரணை நடத்தியபோது, தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பல பெண்களை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். சிலரிடம் காவல்துறை அதிகாரி என்றும் சிலரிடம் தொழிலதிபர் என்றும் கூறிவிட்டு அவர்களை ஏமாற்றி உள்ளார்.

வசதிக்கேற்றவாறு தன்னுடைய பெயரை தீனதயாளன், குமரகுரு, தினேஷ் என மாற்றிக்கொண்டு இதுவரை 6 பெண்களை ஏமாற்றியுள்ளார். ஆந்திரா, திருப்பூர் ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இவர் மீது மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

கைது செய்த ராஜேஷ் பிரித்வியை காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.