இந்து பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுப்பு! காதலி வீட்டு முன்பு தீக்குளித்து உயிர் நீத்த முஸ்லீம் இளைஞன்!

காதலியின் வீட்டிற்கு முன் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையிலுள்ள வடபழனியில் துரைசாமி தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் மொய்தீன் என்பவர் வசித்து வந்தார். நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

மாலதி என்ற பெண் எண்ணூரில் வசித்து வந்தார். இவரும் மொய்தீன் வேலை பார்த்து வந்த அதே நிறுவனத்தில் பணிபுரிந்தார். இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இந்நிலையில் மாலதியின் காதலை அறிந்த அவருடைய பெற்றோர் மாலதியை வன்மையாக கண்டித்துள்ளனர். ஆனால் அதன் பிறகும் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாலதியின் பெற்றோர் அவரை வேலைக்கு செல்லவிடாமல் தடுத்தனர். 2 மாதங்களாக மாலதி வேலைக்கு வராததால் மொய்தீன் மன உளைச்சலுக்கு ஆளானார். 

நேற்று மாலை தே சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மாலதியின் பெற்றோர் மொய்தீனை தடுத்து விட்டனர். இதனால் மொய்தீன் மிகுந்த ஏமாற்றமடைந்தார். செய்வதறியாது தன்னிடமிருந்த மண்ணெண்ணையை உடல்முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். 

காதலன் உடல் கருகி அழும் சத்தத்தை கேட்ட மாலதி அவரை காப்பாற்ற முயன்றார். அவருக்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மாலதி கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக மொய்தீன் உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது எண்ணூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.