YouTube சேனலில் அதிகம் சம்பாதிக்க இளைஞர் செய்த தகாத செயல்! கம்பி எண்ணும் பரிதாபம்!

யூடியூப் சேனலில் கண்டிக்கத்தக்க வகையில் வீடியோ அப்லோட் செய்த ஒருவரை ஸ்பெயின் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யூடியூப் எனும் செயலி நம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. உலக நிகழ்வுகளையும் நம் நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்வதற்கு youtube மிகவும் உதவிகரமாக இருக்கின்றது. யூடியுபின் மூலம் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் இயலும். இதனை அறிந்து கொண்ட பல்வேறு இளைஞர்கள் யூடியூபில் தங்கள் சேனலை தொடங்கி அதில் அவர்களின் வீடியோக்களை அப்லோடு செய்து வருகின்றனர்.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டில் வசித்து வருபவர் கங்குவா ரென். இவரின் வயது 21. இவர் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் பிராங்க் வீடியோக்களை அப்லோட் செய்து வருவது வழக்கம். இந்நிலையில் 2017-ஆம் ஆண்டில் இவர் அப்லோட் செய்த ஒரு பிராங்க் வீடியோ கடும் கண்டனத்தை வரவேற்றது. 

அதாவது ஒரு நவீன ரக டிபார்ட்மென்டல் ஸ்டோர் வாசலில் இருந்த ஒரு ஆதரவற்ற அவரிடம் க்ரீம் பிஸ்கெட் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் கிரீமுக்கு பதிலாக பல் தேய்ப்பதற்கு உதவக்கூடிய பற்பசையை உபயோகத்தியுள்ளார். அதனை தெரியாது அந்த ஆதரவாளர் உட்கொண்டுள்ளார். சாப்பிட்ட பிறகு அவர் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த வீடியோவை தனது சேனலில் upload செய்த உடன் அனைத்து இடங்களில் இருந்தும் அவர் கண்டிக்கப்பட்டார். சமூகநல விரும்பி ஒருவர் அவர் மீது பார்சிலோனா நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பார்சிலோனா நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், கங்குவா ரென்னுக்கு 20 ஆயிரம் யூரோக்கள் அபராதம் மற்றும் 15 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  மேலும் ஐந்தாண்டுகளுக்கு சமூகவலைத்தளங்களில் எந்தவித பதிவு ஏற்றத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.